மனித உரிமைகளை மதிப்பது இலங்கையின் ஸ்திரதன்மைக்கு அவசியமான விடயம் – அமெரிக்க அதிகாரி

36 0

மனித உரிமைகளிற்கான மதிப்பு இலங்கையின் ஸ்திரதன்மைக்கும் பொருளாதார செழிப்பிற்கும் அவசியமான விடயம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்சர்வதேச குற்றம் நீதிக்கான தூதுவர்  பெத்வான் சாக் தெரிவித்துள்ளார்.

கனடாவின்தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையில் நீதி பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக கனடாவை சேர்ந்த தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடன் அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.