ஒஸ்னாபுறுக் தமிழாலய தமிழர் திருநாள்-2023 (காணொளி

408 0

பொங்கல் புத்தாண்டினை முன்னிட்டு, ஒஸ்னாபுறுக் தமிழாலயத்தினால் சென்ற 22.01.2023அன்று தமிழர் திருநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.மண்டப வாசலில் வண்ணக்கோலமிட்டு, மாவிலையும் தோரணமும் தொங்க, அருகில் கரும்பும் தென்னம்பாளையும் மணம் பரப்பும் பலாப்பழமும் கூடவே வாழைக்குலையுமென ,எமது தாய்நிலமாம் தமிழீழத்தினை மாணவச் செல்வங்கள் ஒரு நாள் கண்முன்னே கண்டு மகிழ்ந்தனர். பெற்றோரோடு பிள்ளைகளுமாய் பண்பாட்டு உடையணிந்து மண்பானையில் பொங்கல் பொங்கிய காட்சி தமிழ்த் தொன்மத்தின் மாட்சி. தொடர்ந்து அகவணக்கத்தோடு ஒஸ்னாபுறுக் தமிழாலய நிர்வாகி திரு. வாசன் அவர்களது வரவேற்புரையுடனும், இளைய ஆசிரியர்களின் நெறி ஆள்கையில் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியது. விடுதலை நடனங்கள், உரைகள்,பொங்கல் பாடல்கள் என பல்வேறு நிகழ்வுகள் பார்த்தவர் மனங்களில் பரவசமூட்டியது. காலை 9மணிக்கு ஆரம்பித்த தமிழர்திருநாள் விழா மாலை 5:30 மணிக்கு “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் “எனும் தாரக மந்திரத்தோடு நிறைவு பெற்றது.