உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக தபால் திணைக்களம்,அரசாங்க அச்சகத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுதியளித்துள்ளனர்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தலைமையில் வியாழக்கிழமை (29) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தபால்மா அதிபர்,அரசாங்க அச்சகத் திணைக்கள தலைவர் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.பதிரன குறிப்பிட்டதாவது,
2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இனி தபால் மற்றும் அரசாங்க அச்சகத் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அச்சக பணிகளுக்கு தேவையான கடதாசி,மை உள்ளிட்ட மூல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தற்போது மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன,இவை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்க அச்சகத் திணைக்களத்தில் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினார்கள்.
அடிப்படை கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு மத்தியில் தேர்தலை நடத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தபால்,அச்சகம் ஆகிய தரப்பிற்கு ஆணைக்குழு ஆலோசனை வழங்கியது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக தபால் திணைக்களம்,அரசாங்க அச்சகத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுதியளித்துள்ளனர் என்றார்.

