போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் ஆயுதங்களும் மீட்பு!

216 0

கும்புக கிழக்கு நாரங்கஹஹேன வீடு ஒன்றில் வைத்து ஐஸ் போதைப்பொருள் மற்றும்  ஆயுதங்களுடன் இருவர்  கைது செய்யப்பட்டதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 11 கிராம்  ஐஸ் போதைப்பொருள் மற்றும் 4 கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், நீண்ட காலமாக புறா, வளர்ப்பு மீன் விற்பனை என்ற போர்வையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல், மற்றும் விற்பனையில்  ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்  நடத்தப்பட்ட சோதனையின்போதே  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.