ஆடைத்தொழிற்சாலை பஸ் விபத்திற்குள்ளானதில் 5 பெண்கள் காயம்

149 0

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற  பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில்  பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த ஐந்து பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி-கொழும்பு பிரதான வீதியில் வடக்கு பயாகல பிரதேசத்திலேயே  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.