​பொதுமக்கள் பலநூற்றுக்கணக்கில் திரண்டு கவனயீர்ப்பு போராட்டம்

375 0

பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று இருபதாவது நாளை எட்டியுள்ளது.

இந்தநிலையில் புதுக்குடியிருப்பு பொதுமக்களால் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் இம்மக்களுக்கு ஆதரவாக இன்று நண்பகல் ஒன்றுமுப்பது மணியளவில் திரண்ட நூற்றுக்கணக்கான  மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக  கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னால் கடந்த 03 ஆம் திகதி முதல் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட 49பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது இரண்டாவது நாள் பாராளுமன்ற அமர்வையும் புறக்கணித்து பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி சிவமோகன் மக்களோடு இரண்டாவது நாளாக உணவுதவிர்ப்பு போராட்டத்திலீடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

hdr