முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலை பத்துமணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியை மறித்து இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டமானது சுமார் இரண்டு மணித்தியாலம் இடம்பெற்றது
இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்


