இலங்கைக்கு உதவி கிடைக்க கூடாது என்பதற்காகவா மனித உரிமைகள் குறித்து உலக நாடுகள் பேசுகின்றன

156 0

இலங்கைக்கு உதவிகள் கிடைக்ககூடாது என்பதற்காக  இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து பேசவில்லை என இலங்கைக்கான நியுசிலாந்து தூதுவர் மைக்கல் அப்லெடென் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர்; என விரும்புகின்றோம் இலங்கை அரசாங்கம் பொருளாதார விடயங்களிலும் ஆட்சி தொடர்பான விடயங்களிலும் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்

டெய்லிமிரருக்கான பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் எனது தூதரக உயர்ஸ்தானிகரக சகாக்கள் இங்குள்ள நிலைமை குறித்து காலத்திற்கு காலம் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

எனக்கு இலங்கை விவகாரத்தில் தலையிடும் நோக்கமில்லை,அது இலங்கை மக்களையும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அதன் தலைவர்களையும் பொறுத்தவிடயம்.

ஆனால் எனக்கு முக்கியமான உலகளாவிய கொள்கைகளை சர்வதேச அளவில் முக்கியமான கொள்கைகளை இலங்கை சர்வதேச அளவில் கைச்சாத்திட்டுள்ள முக்கியமான கொள்கைகளை எடுத்துச்சொல்வதில் ஆர்வம் உள்ளது, அதன் மூலம் இலங்கை இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் தருணத்தில் அதனை பின்பற்ற முடியும்.

அமைதியான தருணங்களில் சவாலான விடயங்கள் இல்லாத தருணங்களில் மனித உரிமைகளை பின்பற்றுவது இலகுவான விடயமாக காணப்படலாம்.

ஆனால்அழுத்தங்கள் உள்ள போது மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா என்பதே ஒரு நாட்டிற்கான உண்மையான சோதனையாகும்.2022 இல் அந்த அழுத்தம் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக நான் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஆர்ப்பாட்டம்  குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளேன்.

ஆர்ப்பாட்டக்காரர்களும் இலங்கையின் பாதுகாப்பு படையினரும் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியம் குறித்து நான் பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளேன்.

இந்த கொள்கைகள் எனக்கும் எனது நாட்டிற்கும் மிகவும் முக்கியமானவை நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மூலமும் ஐநா செயற்பாடுகளின் மூலமும் நாங்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளோம்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புபட்ட பாராம்பரியங்கள் உள்ளன பொறுப்புக்கூறும் விவகாரம் நல்லிணக்கம் போன்றவை எங்களிற்கு முக்கியமானவை.

இந்த விடயங்களை நாங்கள் முன்னிலைப்படுத்துவதன் அர்த்தம் இலங்கை அரசாங்கம் இந்த அனைத்து விவகாரங்களிலும் சிறப்பாக செயற்படும் வரை இலங்கைக்கும் அதன் மக்களிற்கும் உதவிகள் சென்றடையக்கூடாது என்பதல்ல.

இது மிகவும் எதிர்மறையான நிலைப்பாடாக அமையும்.

மனித உரிமை விவகாரங்கள் குறி;த்து பேசுவதன் காரணமாக உண்பதற்கு  உணவற்ற இலங்கையர்களிற்கு அல்லது தங்கள் பயிர்ச்செய்கைக்கு உரமற்ற விவசாயிகளிற்கு உதவுவதை நாங்கள் நிறுத்தவில்லை.

யுனிசெவ் மற்றும் உலக உணவுதிட்டத்தின் மூலம் அரைமில்லியன் டொலர் உதவிகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.

ஆகவே மனித உரிமைகள் குறித்து பேசுவதையும் உதவிகளை வழங்குவதையும் ஒரே நேரத்தில் செய்வது சாத்தியம்.

சர்வதேச நாணய நிதிய விவகாரத்திற்கு வருகின்றேன்,நாங்கள் அது வெற்றிபெறவேண்டும் என விரும்புகின்றோம் இலங்கை அரசாங்கம் பொருளாதார விடயங்களிலும் ஆட்சி தொடர்பான விடயங்களிலும் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ஏனென்றால் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பாதையின் ஒரு பகுதியாக வெளிப்படையான ஜனநாயக முறை குறித்து நாங்கள் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இலங்கை தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்க விரும்புகின்றோம்.

இன்னொரு விடயத்திற்காக நாங்கள் இன்னொரு விடயத்தை பணயம் வைக்க போவதில்லை.