ஜானகிக்கு பிணை : திலினிக்கு விளக்கமறியல்!

160 0

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (டிச.13) உத்தரவிட்டுள்ளது.

திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா 50,000 ரூபா மற்றும் 3,5,000,00 ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 14 பிணைப் பத்திரங்களின் கீழ் அவரை விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன், ஒரு வழக்கில் பிணை வழங்க  மறுக்கப்பட்டதனையடுத்து பிரியமாலியை வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டப்பட்டது.

இதேவேளை,  இதே சம்பவம்  தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தனவுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளுக்காக தலா ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் அவரை விடுதலை செய்ய நீதி உத்தரவிட்டது.