கட்டுக்குருந்த படகு விபத்து – காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்பு – பலி எண்ணிக்கை 16

363 0

களுத்துறை – கட்டுக்குருந்த கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல் போயிருந்த 13 வயதான சிறுமி ஒருவரின் உடலம் இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 23 வயதான யுவதியின் உடலமும் அவரது கணவரது உடலம் பேருவளை கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.

அத்துடன் படகு விபத்தால் காணாமல் போயிருந்த 7 வயதான சிறுவனின் உடலம் இன்று பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்டுக்குருந்த படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.