ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து தேசிய சுதந்திட்ட முன்னணி விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, தனக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் பிரத்தியேகமாக இயங்குவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து பின்னர் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது தெரிவித்தார்.

