உத்தேச அபராத கட்டண திருத்தத்துக்கு இணங்க முடியாது என அனைத்து மாகாண தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அபராத பணம் அறவிடப்பட்டால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும் என அனைத்து மாகாண தனியார் பேருந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தனியார் பேருந்து உரிமையாளர்களை அரசாங்கம் சீண்டிப் பார்க்க கூடாது அகில இலங்கை தனியார் பேருந்து போக்குவரத்து சங்க சம்மேளத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடந்தால், டிசம்பர் 2 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பாரிய பணிப் புறக்கணிப்பை போல பணிப் புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு தாயராக உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

