பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விசேட அறிவிப்பு

12 0

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், எதிர்வரும் 3 வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 2023 ஆம் ஆண்டில் நாங்கள் விடுமுறைக் காலத்தைக் குறைத்து பாடசாலை நேரத்தை அதிகரிக்கவும், அந்த ஆண்டில் பாடத்திட்டத்தை முடிக்கவும் முயற்சிக்கிறோம்.

அவ்வாறு நடந்தால், உயர் தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.