இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடு நிராகரிப்பு

15 0

அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தடை செய்தவற்காக வீதித்தடைகளை பயன்படுத்தியதாக இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்படைப் முறைப்பாட்டை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளீன் தில்ருக் ஆகியோருக்கு எதிராக ஊடக செயற்பாட்டாளரான தரிந்து ஜயவர்தன இந்த தனிப்பட்ட முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை ஆராய்ந்த கோட்டை நீதவான் திலின கமகே இந்த வழக்கை தொடர்வது குறித்த தீர்மானத்தை இன்று அறிவித்தார்.