அத்தியாவசியமற்ற பல பொருட்களின் இறக்குமதித் தடை நீக்கப்படுகிறது!

85 0

அத்தியாவசியமற்ற பல பொருட்களின் இறக்குமதி மீதான தடையை தளர்த்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 23, 2022 முதல் பல இது அமுலுக்கு வருகிறது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, சூட் கேஸ்கள், பிரீஃப் கேஸ்கள், மூக்குக் கண்ணாடி கவர்கள், கைப்பைகள் குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் போன்ற பல பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் இதற்கான வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளார்.