மாவீரர் வாரத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி இரத்ததானம்.

193 0

யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பினர் மாவீரர் தியாகங்களை வேற்றின மக்கள் நெஞ்சங்களில் பதிப்பதற்காக யேர்மனியில் வருடாந்தம் இரத்ததானம் செய்து வருவது யாவரும் அறிந்ததே.
அந்த வகையில் இன்று 22.11.2022 செவ்வாய்கிழமை, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியின் உறுப்பினர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.
யேர்மனியில் பிறந்து இந்த நாட்டின் கலாச்சாரத்திற்குள் வாழும் எமது பிள்ளைகள் எமக்காக உயிர்நீத்த மாவீரச் செல்வங்களின் புனித தியாகங்களை பறைசாற்றி நிற்பது போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரிய விடயமாகும்.