கீத் நொயர், கடத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் சுயாதீனமான முறையில் முன்னெடுக்க வேண்டும் – சுதந்திர ஊடக இயக்கம்

246 0

2008ஆம் ஆண்டு, ஊடகவியலாளர் கீத் நொயர், கடத்தப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் தொடர்பான விசாரணைகளை, இறுதிவரை சுயாதீனமான முறையில் முன்னெடுக்க வேண்டும் என, சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இராணுவத்தைச் சேர்ந்த  இராணுவ மேஜர் 5 பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றும் இன்றும் கைது செய்திருந்தனர் .

இந்த சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்   என்பது  குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலார் கீத் நொயர் மீது கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.