பல முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிலாபம் மற்றும் லுணுவில நிலையங்களில் 20 ரூபா பெறுமதியான பயணச்சீட்டுகள் இல்லாததால், 40 ரூபா பயணச்சீட்டுகளை இரண்டாக வெட்டி இரண்டு பயணிகளுக்கு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, மொரட்டுவை, பாணந்துறை, வெயங்கொடை, கம்பஹா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படும் நிலையங்களாக காணப்பட்டும் பயணச்சீட்டுகளுக்கு இல்லாததால் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

