வேயங்கொடை – மாளிகாகந்த பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படும் இடம் ஒன்றை சுற்றிவளைத்த போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேயங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு இடம்பெற்ற தருணத்தில் அங்கிருந்து 5000 ரூபா, 1000 ரூபா மற்றும் 100 ரூபா பெறுமதியான பண தாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர் மாளிகாகந்தையை சேர்ந்த 20 வயது இளைஞர் எனவும் அவர் இன்று அத்தனகல்ல நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பாக வேயங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

