நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் பின்னடைவையே எதிர்நோக்கி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த அராங்கத்தின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விரயங்களும், ஊழல்களும் நல்லாட்சி அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்படுவதாக அந்த முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

