தான்ஸானியாவில் விமானமொன்று ஏரியில் இறங்கியதால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆபிரிக்க நாடான தான்ஸானியாவின் புகோபா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.
தலைநகர் தாருஸ்ஸலாமிலிருந்து புகாபோ நகருக்கு சென்றுகொண்டிருந்த இவ்விமானம் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் புகோபா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விக்டோரியா ஏரியில் இறங்கியது.
இவ்விமானத்தில் 43 பேர் இருந்தனர் எனவும் அவர்களில் 24 பேர் காப்பற்றப்பட்டுள்னர் னஎவும் ப்றீசிசன் எயார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்விமானத்தின் விமானிகள் இருவர், ஆரம்பத்தில் உயிர் தப்பிய நிலையில், விமானி அறையிலிருந்தவாறு உள்ளூர் அதிகாரிகளுடன் உரையாடினர். எனினும், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தான்ஸானியாவின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
59,947 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட விக்டோரியா ஏரி, ஆபிரிக்காவின் மிகப் பெரிய ஏரியாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரியின் வௌ;வேறு பகுதிகள் கென்யா, உகண்டா, தான்ஸானியா நாடுகளுக்கு சொந்தமாக உள்ளன.

