தமிழ் சிறுவன் பிரணவ் விவேகானந்தனின் உடல் மீட்கப்பட்ட பின்னர் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தும் மக்கள்

182 0

அவுஸ்திரேலியாவின்  கான்பெராவின் யெராபி குளத்தில்  பிரணவ் விவேகானந்தனின் உடல் மீட்;கப்பட்டதை குங்கலின் சமூகத்தினர் தமிழ் குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகி;ன்றனர்.

பிரணவ் விவேகானந்தனின் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் தேடுதலை கைவிட்டதை தொடர்ந்து யெராபி குளப்பகுதியிலமுதலாவது மலர்க்கொத்து வைக்கப்பட்டது.

சனிக்கிழமை பெண்ணொருவரினதும் இளைஞனினதும் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து  பிரணவை காணவில்லை என பொலிஸார் அறிவித்தனர்.

யெராபி குளப்பகுதியில்  8 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் அறிவித்தனர்.

அவரது தாயார் சகோதரனின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வழமையான உற்சாகமாக மகிழ்ச்சியாக காணப்படும் யெராபி குளப்பகுதி களையிழந்து சோகத்துடன் காணப்பட்டது.பொதுமக்கள் விசாரணை நடக்கும் பகுதியிலிருந்து விலகி சென்றனர்.

பிரவீனின் உடலை மீட்ட பின்னர் மதியமளவில் காவல்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கைக்கான அடையாளமாக செடிகொடிகள் மாத்திரம் விடப்பட்டன.

அந்த பகுதியில் சிறுவன் ஒருவனி;ன் பிறந்தநாள் கொண்;டாட்டம் அமைதியாக காணப்பட்டது.

பொதுமக்களில் பலர் மரங்களின் கீழ் அமர்ந்திருந்தனர்,ஒரு குடும்பம் தனது நான்கு வயது மகளுடன்  கரைக்கு சென்று தங்கள் சமூகத்தில் நடந்ததை நம்பமுடியாத நிலையில் முணுமுணுத்தனர்.

 

பீட்டர் டொஸ்கொமின் உடல்  வீடு யெராபிகுளத்தை  பார்த்தபடி உள்ளது அவர் இந்த துயரம் இடம்பெற்ற பகுதியில் முதலாவது மலரை வைத்தார் தன்னை போல பலர் அஞ்சலி செலுத்துவார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.

என்ன ஒரு துயரமான சம்பவம் நான் இந்த சம்பவத்தினால் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளேன் நான் ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தேன் என அவர் குறிப்பிட்டார்.

தாயும் இரண்டுபிள்ளைகளும் உயிரிழந்ததை பெரும் துயரமான விடயம் பெரும் துயரமான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை முதல் உடல்களை தேடிய சுழியோடிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆரம்பித்து 10.45 மணியளவில் பிரணவின் உடலை மீட்டனர்.

காலை 8 மணியளவில் பொதுமக்கள் பிரணவ் குடும்பத்தினரின் உடல்களை பார்த்ததை தொடர்ந்து காவல்துறையினர் அவற்றை மீட்டனர்.

குறிப்பிட்ட பகுதியில் பின்னர் வெள்ளை நிற வாகனமொன்றும் மீட்கப்பட்டது.

காரில் குழந்தைக்கான ஆசனமும் காணப்பட்டது தடாகத்தின் நுனியில் அது காணப்பட்டது என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.

டிரக்கொன்று செல்வதை தடுத்தவாறு கார் காணப்பட்டது நான் அதன் கதவை திறந்தேன் அது மூடப்படவில்லை குழந்தைக்கான ஆசனமும் காணப்பட்டது காரின் சாவிகளையும் காணமுடியவில்லை என ரொட் வீட்லி முகநூலில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களுடன் இன்னொரு தரப்பு  ஈடுபட்டிருக்கவில்லை என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.