இரும்பு, டைல்ஸ், அலுமினியம் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
கட்டுமானப் பொருட்கள் சம்பந்தமான வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் வர்த்தகர்கள் கட்டுப்பாடின்றி, விலை அதிகரிப்பதில் தலையிடுமாறு கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனத்துக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த கடன் உதவித்திட்டத்தின் கீழ் கட்டுமானத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரியிலிருந்து பெறுவதற்கும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

