பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை பயன்படுத்தினால் நாட்டின் மருந்து பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பன்டோரா பேப்பரில் தெரிவிக்கப்பட்டுள்ள பணத்தை மீட்பதே நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான வழி என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பணத்தை மீட்பது மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உதவும் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் டொலர் பற்றாக்குறையே மருந்து தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
சீனா இந்தியா அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடமிருந்து டொலர்களை பெறுவது நிரந்தரமான தீர்வாக அமையாது நாட்டின் களவாடப்பட்ட சொத்துக்களை வளங்களை மீட்கவேண்டும் ஆனால் தற்போதைய அரசாங்கம் இதனை செய்யும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் களவாடப்பட்ட நிதி அனைத்தும் மீட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

