காட்டுக்குள்ளிருந்து ஆணின் சடலம் மீட்பு

180 0

மஹவெல பிரதேசத்தில் உள்ள நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மஹவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹோமாபொல பிரதேசத்தில் உள்ள நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர் ஹோமபொல கொலனி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவராவார்.

குறித்த நபர் ஆடுகளுக்கு இலைகளை பறித்துக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹவெல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.