யாழ். வேலணைப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பில தட்டிக் கேட்ட வேலணைப் பிரதேச பிரதேச சபை உறுப்பினர் மீது 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலணை கிழக்கு முத்துமாரி அம்மன்கோவிலடிப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனை, போதைப்பொருள் விற்பனை மற்றும் மாட்டுத்திருட்டு என்பவற்றை தடுப்பதற்காக தீவக சிவில் சமூகத்துடன் சேர்ந்து முன்னாள் வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து நேற்று இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இச் சம்பவம் வேலணை மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

