கதிர்காமம் பிரதேசத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் புதன்கிழமை (ஒக் 19) இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்க கங்கையில் குளிக்கச் சென்ற வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு முதலையால் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் குறித்த பெண்ணை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 75 வயதுடைய கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தெம்பரவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

