தனியார் பேருந்து சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

226 0

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு  அனைத்து தனியார் பேருந்து சங்கங்களும் தீர்மானித்துள்ளன.

பொருளாதார நெருக்கடி காரணமாக லீசிங் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், இந்நிலையில் கட்டணம் செலுத்தாதமைக்காக உரிமையாளர்களிடமிருந்து பேருந்துகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

லீசிங் கட்டணத்தை செலுத்தாதமைக்காக இதுவரை 50 பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர் என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கொவிட் பெருந்தொற்று காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் நாங்கள் மாதாந்த லீசிங் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

அரசாங்கத்துக்கு நாங்கள் இதுகுறித்து அறிவித்ததும், சிறிய காலத்துக்கு எங்களுக்கு சலுகை வழங்கப்பட்டது. எனினும், நாங்கள் செலுத்த தவறிய கட்டணத்தை எங்கள் மாதாந்த கட்டணத்தில் இணைத்துள்ளனர் என தனியார் பேருந்து சங்கங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தாதமைக்காக 3000 பேருந்துகளை கைப்பற்றும் முயற்சியில் லீசிங் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன எனவும் பேருந்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். கைப்பற்றிய பேருந்துகளை திருப்பித் தர வேண்டும் என லீசிங் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.