யாழ். இந்திய துணைத் தூதுவரின் நெடுந்தீவு விஜயம்

190 0

யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் நேற்று செவ்வாய்க்கிழமை (ஒக் 18) நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டதாக யாழ். இந்திய துணைத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

இதன்போது நெடுந்தீவில் கல்வி, பொது உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து பிரதேச செயலர், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இந்திய புலமைப்பரிசில் பற்றி விளக்கமளித்ததோடு, அங்கு மாணவர்களுக்கு பணப்பரிசுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.