இருவேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு

187 0

நாட்டின் இருவேறு பகுதிகளில் இருந்து உயிரிழந்த நிலையில் நேற்று இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு- கொள்ளுப்பிட்டி

கொள்ளுப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  கடற்கரை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் உயிரிழந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

119 எனும் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கொள்ளுப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார் கள்.

இந்நிலையில் உயிரழந்தவர் 40 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர் எனவும்; உயரம் 5 அடி மற்றும் 6 அங்குலம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் நீல நிற டெனிம் காற்சட்டை மற்றும் கருப்பு நிற நீண்ட கை சட்டை அணிந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்

ஹெட்டிப்பொல

ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வீலகெதர தோட்டப் பகுதியில் உள்ள வீதியில் நபர்  ஒருவர்  காயமடைந்த நிலையில் விழுந்து உள்ளதாக ஹெட்டிப்பொல பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை சிகிச்சைகளுக்காக ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 62 வயதுடைய, குடாவௌ, மங்டாபொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்

உயிரிழந்தவர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பாதசாரி எனவும் உடம்பில் காயங்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.