மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல்(காணொளி)

408 0

 

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றது.

சனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள், தேசிய கல்விப் பொதுக் குறிக்கோள்கள், சமாதானம், நல்லுறவு, மக்களுக்கும் சமயக் குழுவினருக்கு இடையிலான கூட்டுணர்வு, சகவாழ்வு, சகோதரத்துவம், புரிந்துணர்வு போன்ற தேசிய வேலைத்திட்டமொன்றை பாடசாலை மட்டத்திலும், பிரதேச மற்றும் தேசிய அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மாணவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காக நேரடியாக இணைத்துக்கொள்ளும், மாணவர் பாராளுமன்றம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தேசிய வேலைத்திட்டமொன்றை பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளும் நோக்காககொண்டு, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில்  மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல், கல்லூரி அதிபர் வெஸ்லியோ வாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.

மாணவர் பாராளுமன்றத்தில் சபாநாயகர், பிரதமர், சபை முதல்வர், பிரதிச் செயற்குழுத்தலைவர், அமைச்சர்கள் 10 பேர், பிரதி அமைச்சர்கள் 10 பேர், ஆலோசனைக் செயற்குழுக்கள் 10 பேர் ஆகியோரை தெரிவு செய்வதற்கான தேர்தலாக இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவ பாராளுமன்ற தேர்தலில்  அங்கிகரிக்கப்பட்ட வாக்குகள் ஆயிரத்து 575 ஆகும். இதில் அளிக்கப்பட வாக்குகள் ஆயிரத்து 179  ஆகும்.

இதற்கு அமைய இன்று நடைபெற்ற மாணவ பாராளுமன்ற தேர்தலில் 74.8 வீதம் வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.