கடல் பாதுகாப்பு நடவடிக்கையால் அரசுக்கு 20 மில்லியன் டொலர் வருவாய்!

240 0

சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாக அரசாங்கம் இதுவரை 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அவன்கார்ட் நிறுவனத்திடம் இருந்து சமுத்திர பாதுகாப்பை கடற்படயினர் பொறுப்பேற்று 15 மாதங்களில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.

கொழும்பு மற்றும் காலி நடவடிக்கை மத்திய நிலையங்கள் ஊடாக 8 ஆயிரத்து 200 தடவைகள் கப்பல்களுக்கு கடற்படையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

கடல் பாதுகாப்பு மூலம் கிடைத்துள்ள இந்த பணம் நேரடியாக அரச கூட்டு நிதியத்தில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.