மொரட்டுவ பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கிரிக்கெட் விளையாட்டின் போது, இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் அறுவர் காயமடைந்துள்ளனர்.
மொரட்டுவை மற்றும் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த இரு பாடசாலைகளுக்கும் இடையில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது.
இதன்போது, இரு பாடசாலை மாணவர்களும் மோதிக் கொண்டுள்ளனர். இதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் 10 மாணவர்கள் மொரட்டுவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை இன்று மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

