இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்ற முனைப்பு சிங்களவர்களுக்கும் உண்டு – சுமந்திரன்!

236 0

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென சிங்கள மக்களும் எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உத்தேச அரசியல் யாப்புத் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

உத்தேச அரசியல் யாப்பில் நியாயமான அதிகாரப் பகிர்வு வழங்கப்படவேண்டுமென அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ள சுமந்திரன், அதிகாரப் பகிர்வு மாத்திரமல்ல, நிறைவேற்று அதிகாரம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் எனச் சகல விடயங்களும் சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு மாற்றியமைக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்களிடையே சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல புதிய அரசியல் யாப்பானது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டுமென நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்தது. இருப்பினும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.