கல்விமான்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

255 0

சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறந்த சேவைகளை வழங்க கல்விமான்கள் முன்வரவேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கல்விமான்கள் தமது துறைகளுடன் மாத்திரம் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டுவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தின் பெரும்பாலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கல்விமான்கள் குரல்கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கேகாலை வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கல்விமான்கள் தமது அறிவை பயன்படுத்தி சமூகத்தின் நன்மைக்காகச் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் இலவச கல்வி மற்றும் சுகாதார துறைகளை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.