மட்டக்களப்பு சிறி மாமாங்கேஸ்வரர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது.
2017 ஆம் ஆண்டுக்கான திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், பாடசாலை மைதானத்தில் அதிபர் வி.முருகதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாணவர்களின் ஓட்டப்போட்டி, மாணவர்களின் உடற்பயிற்சி பயிற்சி, வினோத உடை போட்டி, மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் என்.பிரசன்னா இந்திரகுமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி வி.லவக்குமார், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ.சுகுமாரன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

