கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸ் ஜீப் வண்டி…(காணொளி)

254 0

வவுனியா தமிழ் மகா வித்தியாலய பொறியியல் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், வன்னி பிராந்திய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால், பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது கல்லூரி அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில், வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பொலிஸ் வாகனம், வித்தியாலய அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய வன்னிக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்,கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் பணிப்பிற்கமைய மாணவர்களுக்கு இவ் வாகனத்தை வழங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார, வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி குமாரசிங்க, போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் பரிசோதகர் அனுரா சாந்த, ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.