கண்டியில் இடம்பெற்ற கோர விபத்து 25 பேர் காயம்

323 0

கண்டி ,கெடம்பே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

கடுகன்னாவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன், கண்டி நோக்கி பயணித்த மற்றுமொரு பஸ் யஹனதென்ன பகுதியில் வைத்து மோதுண்டதில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த மூவர் கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.