அமெரிக்கா சென்றார் ராஜித

302 0

Rajitha-Senarathnaஇலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார மற்றும் சமூகப் பேரவை அமர்வுகள் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

அதில் கலந்துக் கொள்வதற்காகவே அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்த அமர்வானது எதிர்வரும் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின் போது, உலகில் தொற்றல்லாத நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள்; தெரிவிக்கின்றன.