ஜேம்ஸ் வெப்பின் புதிய வைரல்: நெப்டியூன் படத்தை வெளியிட்ட நாசா

91 0

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட நெப்டியூன் கோளின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசா வெளியிட்ட படத்தில், நெப்டியூன் கோளின் வண்ணமயமான வளையங்களும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நெப்டியூனின் 14 துணைக்கோள்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

நெப்டியூனை சுற்றி வரும் நிலவுகளில் ட்ரைடான் நிலவும் ஒன்று. மிகப் பெரிய அளவையுடைய ட்ரைடான் நெப்டியூனின் வளைவுப் பாதையில் சுற்றி வரும் காட்சியும் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியில் பதிவுச் செய்யதுள்ளது. தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூரியனை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் ஆகிய கோள்கள் தனித்தனி பாதைகளில் சுற்றி வருகின்றன. நெப்டியூன் எட்டாவது கோளாகச் சூரியனைச் சுற்றிவந்தது. சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் உள்ள தொலைவு சுமார் 450 கோடி கிலோ மீட்டர். பூமி, சூரியனைச் சுற்றிவர ஓராண்டு காலம் ஆகிறது. நெப்டியூன் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 164 பூமி ஆண்டுகள் ஆகின்றன. நெப்டியூன் கோள் சூரிய மண்டலத்தின் எல்லையில் உள்ளது. தொலைநோக்கி மூலம் பார்த்தால் நீல நிற ஒளிப்புள்ளியாகத் தெரியும்.