தைவானில் சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்தது: 32 பேர் கருகி பலி

286 0

தைவானில் சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உடல் கருகி பலியாகினர். 12 பேர் தைபே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தைவான் தலைநகர் தைபே அருகே ஒரு சுற்றுலா பஸ்சென்று கொண்டிருந்தது. அதில் 44 பேர் பயணம் செய்தனர். அதிவேகமாக வந்த பஸ் ரோட்டின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது.

அப்போது மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்தது. அதில் இருந்து கரும்புகையுடன் தீ எரிந்தது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் 30 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாகினர். 2 பேர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 32 ஆனது.

பலியானவர்களில் 20 முதல் 60 வயது உடையவர்கள் அடங்குவர். அவர்கள் அனைவரும் தைவானை சேர்ந்தவர்கள் மேலும் 12 பேர் தைபே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.