சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வெளியானதும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் 30 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினார்.
சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் முன்பே இன்று காலை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் வீட்டுக்கு அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் வந்தனர்.அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலாளர் பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநான், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மூத்த நிர்வாகி கமலக்கண்ணன் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர்.
சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வெளியானதும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி தரவில்லை. அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சுமார் 30 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினார்.
தீர்ப்பு வெளியானதும் பன்னீர் செல்வம் வீட்டு முன்பு கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் ஆரவாரத்துடன் மகிழ்ச்சி கோஷமிட்டனர். இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சசிகலாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு 4 வருடம். அம்மா தீர்ப்பு 40 வருடம்…’ என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

