நாளுக்கு நாள் வீழ்ச்சயடைந்து வரும் இளைஞர்களின் ஈர்ப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்காக மஹிந்த ராஜபக்சவுக்கும், முன்னிலை சோசலிசக் கட்சி தலைவர் குமார் குணரட்னத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்தின் போது குமார் குணரட்னத்தை நாடு கடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கோரிக்கைக்கமைய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
தற்போது வரையில் மஹிந்தவின் பிரதான இளைஞர்களின் வாக்கு ஈர்ப்பாளரான விமல் வீரவன்ச திகழ்கிறார். இந்நிலையில் வீரவன்ச 2020ம் ஆண்டு தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்கின்ற அரசியல் திட்டம் எதிர்காலங்களில் ராஜபக்சர்களை பாதிக்கும் என ராஜபக்சர்களின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தற்போது இளைஞர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள கூடிய மாற்று அரசியல் சக்தியுடன் இரகசிய ஆதரவில் நுழைவதற்கு ராஜபக்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
நேரடியாக மஹிந்த தொட்புபடாமல் நுட்பமாக அவருக்கு சாதகமான மக்கள் வாக்கை பெறுவதற்கு குமார் குணரட்னத்தின் ஆதரவு வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதியாக அந்த கலந்துரையாடலில் நாமல் ராஜபக்ச கலந்துக் கொண்டுள்ளார்.
இவ்வாறு ராஜபக்சர்களுக்கு ஆதரவு வழங்க குமார் குணரட்னம் முன்வந்துள்ளமையினால் ராஜபக்ஷ குடும்பத்துடன் வீரவன்சவுக்கு நிலவிய சுமுக உறவில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீரவன்சவை சிறையில் இருந்து மீட்பதற்கு ராஜபக்சர்கள் எவ்வித உதவியையும் வழங்காமல் இருப்பதன் ஊடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

