நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மதுபான விற்பனை 28 வீதமான அதிகரித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
2014 ஆம் 74 மில்லியன் லீற்றர் மதுபானம் விற்பனை செய்யப்பட்டதுடன் தற்போது 94 மில்லியன் லீற்றர்களாக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், இது 300 சதவீத அதிகரிப்பாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மதுபானத்திற்கு ஆதரவான கொள்கை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் நேரடியாக இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் கால் போத்தல் சாராயத்தின் விலையை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது. மக்களுக்கு விஷ மதுபானத்தை வழங்கி, அதில் கிடைக்கும் பணத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் நிதியத்திற்கு அனுப்பி அந்த பணத்தை 2020 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு பயன்படுத்த எண்ணியுள்ளனர் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

