இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 8 வருட காரணமாக சட்டவிரோதமான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படும் மாலபே சயிடம் பட்டச்சான்றிதழை விற்பனை செய்யும் நிறுவனத்தை சட்ட ரீதியானதாக்கும் முயற்சியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இந்தநிலையில், இரசாயண பரிசோதனை பயிற்சிகள் போதுமானதாக இல்லை என்பதன் காரணமாக மருத்துவ சட்டமூலத்தின் கீழ் தனி்ப்பட்ட மருத்துவ வித்தியாலய மாணவர்கள் பதிவு செய்வதை நிராகரித்து இருந்தது.
எனினும், இலங்கை மருத்துவ சபையின் அவர்கள் மருத்துவர்களாக பதிவு செய்யும் வாய்ப்பு இருப்பதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.
எனவே அதற்கு எதிராக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (13) முற்பகல் 10.30 அளவில் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

