இலங்கை: ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவிற்கு வரவேண்டும்

192 0

நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் நெருக்கடி நிலவும் காலப்பகுதியில் இலங்கை அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களை மிகவும்கடுமையாக ஒடுக்கியுள்ளதுடன் மிகவும் ஆபத்தானவர்களாக சித்தரித்துள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

எதிர்ப்பிற்காக தண்டிக்கப்பட்டது விளக்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான இலங்கையின் ஒடுக்குமுறை என்ற தனது புதிய அறிக்கையில் இலங்கை அதிகாரிகள் எவ்வாறு அமைதியாக ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாக்க தவறினார்கள் அளவுக்கதிகமான பலத்தை பயன்படுத்தினார்கள் கைதுசெய்வதற்காக பொலிஸார் படையினரை பயன்படுத்தினார்கள் ஆர்ப்பாட்டக்காராகளை பழிவாங்கினார்கள் அவர்களை பூதாகரமாக சித்தரித்தார்கள் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இலங்கை சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாற்றில் மானஅதன் வரலாற்றில் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடியால் பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மக்களிற்கு தங்கள் அதிருப்தியை அமைதியாக வெளிப்படுத்துவதற்கான உரிமையுள்ளது இந்த உரிமையை பயன்படுத்துவதற்கு உதவவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது ஆனால் இலங்கை அதிகாரிகள் பலமுறை மக்களின் குரல்களை நசுக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பலம் அச்சுறுத்தல் ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதிப்படுத்துவதற்காக துன்புறுத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை பயன்படுத்துகின்றனர் மாற்றுக்கருத்து உடன்பட மறுத்தலிற்கு இலங்கையில் இடமில்லை என்ற அச்சம் தரும் செய்தியை தெரிவிக்கின்றனர் என யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அமைதியாக ஒன்றுகூடுதலிற்கான சுதந்திரத்திற்கான உரிமை மதிக்கும் சமூகமொன்றிற்கான மைல்கல் அதனை பாதுகாக்கவேண்டும் மதிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.