கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பாக தகவல் வழங்கலாம்

264 0
பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தொடர்பில் கூட்டுறவு மற்றும்  உள்நாட்டு வியாபார அமைச்சின் கீழ் உள்ள, ” பாவனையாளர்  அலுவல்கள் அதிகார சபையின் இலக்கங்களிற்கு தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல பொருட்களிற்கும் கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அவ்வாறு அறிவிக்கப்பட்ட விலைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியவில்லையென நுகர்வோர் சுட்டிக்காட்டுவது தொடர்பில் கூட்டுறவு மற்றும்  உள்நாட்டு வியாபார அமைச்சின் கீழ் உள்ள, ” பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்” தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
நாட்டின் எப்பாகத்திலும் பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தொடர்பில் கூட்டுறவு மற்றும்  உள்நாட்டு வியாபார அமைச்சின் கீழ் உள்ள, ” பாவனையாளர்  அலுவல்கள் அதிகார சபையின் இலக்கங்களிற்கு தெரியப்படுத்த முடியும். அவ்வாறு தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அண்மையில்  அரசாங்கத்தால் விலை  குறைப்பு செய்யப்பட்டு வர்த்தமானியில் பிர சுரிக்கப்பட் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படாமல் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்  குற்றம் சாட்டியுள்ளனர்.
அண்மையில் , அரசாங்கத்தால் விலை குறைப்பு செய்யப்பட்டு வர்த்தமானியில் பிர சுரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களான  மைசூர் பருப்பு ஒரு கிலோ 159, ரூபா, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலிக்கருவாடு தாய்லாந்து ஒரு கிலோ 490, ரூபா, நெத்தலிக்கருவாடு துபாய் 405, ரூபா, பாசிப்பயறு ஒரு கிலோ 205, ரூபா, வெள்ளைச் சீனி 93, ரூபா, உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது 115, ரூபா போன்ற விலைகளுக்கு  அமைவாக  விற்பனை செய்யவேண்டும்.
ஆயினும்,  வடக்கு மாகாணத்தின் எந்த மாவட்டத்திலும் இப்பொருட்கள் குறித்த கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள முடியவில்லை இது  தொடர்பில் கேள்வி எழுப்பும் நுகர்வோருக்கும், வர்த்தகர்களும்  இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு  பின்னர்  அது கைகலப்பில் முடிந்துள்ள சம்பவங்களும் நடை பெற்றுள்ளது.இந்த  விடயம்  தொடர்பில் கூட்டுறவு மற்றும்  உள்நாட்டு வியாபார அமைச்சின் கீழ் உள்ள, ” பாவனையாளர்  அலுவல்கள் அதிகார சபையின்” தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,
பொதுமக்கள் இது தொடர்பில் உடனடித் தொலைபேசி இலக்கங்களான, 011.7755481, 011.7755482, 011.7755483, ஆகியவற்றின்  ஊடாகவோ அல்லது 011.2321696, என்ற தொலை நகல்  ஊடாகவோ அல்லது    chairmancaa@ sltnet.lk. என்ற  ஈ. மெயில் ஊடாகவோ தொடர்பு கொண்டு தகவல்களை அறியத்தருமாறும் தாங்கள்  உடனடியாக நடவடிக்கை மோற்கொள்வோம்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் தகவல் தருபவர்கள் தொடர்பில்  இரகசியம் பேணப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள தமது பிரிவுச் செயலகத்தின்,   024.3244932, 024. 7755455, ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக  முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டத்திங்களில் உள்ள நுகர்வோர்  முறைப்பாடுகளை மேற்கொண்டு  தெரியப்படுத்தி  உதவுமாறும் பாவனையாளர் முறைப்பாட்டு பிரிவுப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.