யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில், கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வல்வெட்டிதுறையில், தொண்டமானாறு காட்டக்குளம் கடற்கரையில், 188 கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கடல்வழியாக, இலங்கைக்கு குறித்த கஞ்சா கடத்திவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 12:15க்கு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

