அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரும், சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் உள்ள தங்காலை, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்ப்ட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ், இது தொடர்பில் எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்ட நிலையிலேயே, அவர்கள் தங்காலை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, அரசௌக்கு எஹிரான சதிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனபப்டும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைந்த பொலிஸ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரின் தகவல்கள் பிரகாரம், 90 நாள் தடுப்புக் காவல் விசாரண நடக்கும் தற்Tபோதைய சூழலில், தங்காலையில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் விரும்பினால் சட்டத்தரணிகளை சத்திக்க அனுமதியளிக்கப்படும் என அறிய முடிகின்றஹு.
அத்துடன் நெருங்கிய உறவினர்கள் என கிராம சேவகரின் அத்தாட்சியுடன் வரும் உறவினர்கள் மட்டும் அவர்களை வார நாட்களில் ஒரு நாளில் மட்டும் உற்பகல் 9.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பார்ப்பதற்கு அனுமதிப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது ஐந்து லாம்பு சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரோடு ஒன்றாக பயணித்த ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோர் கடந்த 18 ஆம் திகதி முதல், பயங்கரவாத தடை சட்டத்தின் விதிவிதாங்கள் பிரகாரம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் அனுமதியின் கீழான 72 மணி நேர தடுப்புக் காவலின் கீழ், பேலியகொட பொலிஸ் நிலைய கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டு களனி வலய குற்ற விசாரணை பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்தனர்.
கல்வெவ சிறிதம்ம தேரர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்ர்து வைக்கப்ப்ட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந் நிலையில் இந்த மூவர் குறித்த விசாரணைகளையும் உடனடியாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கையளிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன கடந்த 21 ஆம் திகதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கும் விசாரணைகளில், இந்த மூன்று பேரும் அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து அவதானம் செலுத்தி விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் பயங்கர்வாத நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவும் ஆலோசனை வழ்னக்கப்பட்ட நிலையிலேயே, சி.ரி.ஐ.டி. மற்றும் சி.ஐ.டி. இணைந்த பொலிஸ் குழுவொன்றூடாக விசாரணைகல் தர்போது முன்னெடுக்கப்படுகின்றன.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்
கடந்த 18 ஆம் திகதி மாலை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கறுவாத்தோட்டம், கொம்பனித் தெரு, பொரளை பொலிஸ் பிரிவுகள் மற்றும் களனி வலய குற்ற விசாரணைப் பிரிவு என்பனவற்றால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில், வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோரும் உள்ளடங்கும் நிலையில் அந்த மூன்று பேருக்கு எதிராக மட்டும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. போராட்டக்களத்தில் ஏப்ரல் 09 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், முதலில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான முதல் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்ப்ட்டு நீதிமன்றில் ஆஜர்ச் எய்யப்பட்ட 16 பேரில் ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

