நாட்டில் 300 க்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறித்த தடை அமுலுக்கு வருமென நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குறித்த பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


